ஜிமெயில் ( Gmail ) உருவாக்குவது எப்படி?

பெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜிமெயில் ஐடி உருவாகுவது எப்படி? என்று பார்ப்போம்.

Blogger ப்ளாக்கரில் புதிய பதிவு எழுதுவது எப்படி?

ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.

அதில் New Post  என்பதனை க்ளிக் செய்தால் புதிய பதிவு எழுதுவதற்கான பக்கம் பின்வருமாறு வரும்.

 1. பதிவிற்கான தலைப்பு கொடுக்க வேண்டும்.
 2. நீங்கள் எழுத நினைக்கும் பதிவை எழுத வேண்டும்.
 3. Publish - நீங்கள் பதிவை எழுதி முடித்தப் பின் அதனை பிரசுரிப்பதற்கு இதனை சொடுக்கவும்.
 4. Save - நீங்கள் பதிவை எழுதி, பிறகு பிரசுரிக்கலாம் என்று நினைத்தாலோ, அல்லது பாதி பதிவை எழுதி மீதியை பிறகு எழுதலாம் என நினைத்தாலோ Save என்பதை சொடுக்கவும். அவ்வாறு சேமித்த பதிவுகள் Drafts எனப்படும்.
 5. Preview - நாம் எழுதும் பதிவை பிரசுரிப்பதற்கு முன்னால் அது பிரசுரித்தப் பின் எப்படி வரும் என்பதை முன்னோட்டம் பார்க்க இதனை சொடுக்கவும். இதன் மூலம் நம் பதிவில் எழுத்துப் பிழைகளோ அல்லது வேறு பிழைகளோ இருந்தால் சரி செய்துக் கொள்ளலாம்.
 6. Close - பதிவெழுதும் பகுதியில் இருந்து வெளியேற இதனை சொடுக்கவும்.
பதிவின் தலைப்புக்கு கீழ் பின்வருமாறு இருக்கும்  இவைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


Compose என்பது நாம் எழுதும் பதிவு, இணைத்திருக்கும் படங்கள் எல்லாம் ப்ளாக்கில் எப்படி இருக்குமோ (கிட்டத்தட்ட) அதே போல காட்சி அளிக்கும். HTML என்பது நாம் எழுதும் பதிவு, இணைத்திருக்கும் படங்கள் ஆகியவற்றை HTML நிரல்களாக காட்டும். எப்போதும் Compose Mode-ல் வைத்து எழுதுங்கள். உங்களுக்கு HTML தெரிந்திருந்தால் நிரலில் மாற்றம் செய்யலாம்.

இது Undo/Redo ஆகும். பதிவெழுதும் போது மாற்றம் செய்தால் முந்தைய மாற்றத்திற்கு செல்லவும், பிந்தைய மாற்றத்திற்கு செல்லவும் பயன்படுகிறது.

இவைகள் எழுத்துக்களை அழகுப்படுத்த உதவுகிறது. நாம் மாற்ற வேண்டிய வார்த்தைகளை தேர்வு செய்து இதனை சொடுக்க வேண்டும்.

 1. Link மற்ற இணையப்பக்கங்களுக்கு இணைப்பு (Links) கொடுக்க
 2. படங்கள் இணைக்க
 3. வீடியோக்கள் இணைக்க
 4. Insert special characters - சிறப்பு எழுத்துகள் செருக
 5. Jump Break வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது


இவைகள் (இடது, வலம், நடு என்று) எழுத்துக்களை அல்லது படங்களை Align செய்ய, பட்டியலிட, மேற்கோள் காட்ட, எழுத்துக்களில் நாம் செய்த மாற்றங்களை நீக்க, எழுத்துப்பிழைகளை பார்க்க பயன்படுகின்றன.

இனி அதே பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பற்றி பார்ப்போம்.
Labels - நாம் எழுதும் பதிவிற்கு தொடர்புடைய குறிச்சொற்களை இங்கு எழுத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ப்ளாக் பற்றி  எழுதினால் "Blog", "Blogspot", "Blogger" என்பது போன்று குறிச்சொற்களை கொடுக்கலாம்.


Schedule - நீங்கள் எழுதும் பதிவை எப்பொழுது பிரசுரிக்க வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். Default-ஆக இது Automatic என்று இருக்கும். நீங்கள் எப்பொழுது Publish பட்டனை க்ளிக் செய்கிறீர்களோ, அப்பொழுது பிரசுரமாகும். இல்லையென்றால் Set Date and Time என்பதை க்ளிக் செய்து எப்பொழுது பிரசுரமாக வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு பதிவை மறுநாள் காலை பிரசுரமாக தேர்வு செய்தீர்கள் என்றால் மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இல்லையென்றாலும் தானாக பிரசுரமாகும். மேலும் ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகளை இன்று பதிந்தது போலவும் மாற்றலாம்.

Permalink - உங்களுடைய URL ல் Link மாற்றுவது 

Before - https://tamilearnmoney.blogspot.com/2018/11/blogger_11.html
After - https://tamilearnmoney.blogspot.com/2018/11/bloggerpost.html


Location - இது  இருப்பிடத்தைக் காட்டுவதற்காக பயன்படுகிறது.


Options - இந்த பகுதியில் கீழுள்ள வசதிகள் உள்ளன.

Reader Comments - நீங்கள் எழுதும் அந்த பதிவில் வாசகர்கள் பின்னூட்டம் (Comment) இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். (இது மற்ற பதிவுகளை பாதிக்காது. எழுதும் அந்த பதிவிற்கு மட்டுமானது)

Compose Mode - Compose Mode-ல் வைத்து பதிவு எழுதும் போது HTML Code இணைத்தால், அது Code-ஆகவே தெரிவதற்கு "Show HTML literally" என்பதனையும், Code-ற்கு பதிலாக அதன் வெளியீடு தெரிவதற்கு "Interpret typed HTML" என்பதனையும் தேர்வு செய்யவும்.

Line Breaks - இது தேவையில்லை விட்டுவிடுங்கள். ( இரண்டும் முயற்சித்தேன். ஒன்றாகத் தான் உள்ளது)
பதிவு எழுதியப் பின் Publish என்பதை கொடுக்க வேண்டியது தான்.

Blogger உருவாக்குவது எப்படி?

உங்களுக்கு கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

உங்களுக்கு ஜிமெயில் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.


பிறகு வரும் பக்கத்தில் Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுத்து Contiune to Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள்.


CREATE NEW BLOG என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்


 1. Title என்ற இடத்தில் ப்ளாக் பெயரை கொடுங்கள்.
 2. Address என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கிற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்.
 3. Theme என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் ப்ளாக்கின் தோற்றம்) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம்.

பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு  தான்! உங்களுக்கான புதிய ப்ளாக் உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.


 
© 2018 Tamil Earn Money All Rights Reserved.
|